“கொரோனாத் தடுப்பூசியில் சமத்துவம் தேவை “ :ஐ.நா சபை பொதுச் செயலாளர் தெரிவிப்பு

Keerthi
4 years ago
“கொரோனாத்  தடுப்பூசியில் சமத்துவம் தேவை “ :ஐ.நா சபை பொதுச் செயலாளர் தெரிவிப்பு

“கொரோனாத்  தடுப்பூசியில் சமத்துவம் தேவை “ என ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்ரர்ஸ் (Antonio Guterres )தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்  ” கொரோனாத் தொற்றினால் இதுவரை 50 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  

இது நாம் தோற்றுக் கொண்டிருக்கிறோமோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. வளம் மிக்க வளர்ந்த நாடுகள் எல்லாம் தங்கள் மக்களின் உயிர் காக்க மூன்றாம் கட்டத் தடுப்பூசியையும்  செலுத்தத் தொடங்கிவிட்டன. ஆனால், ஆபிரிக்கக் கண்டத்தில் இதுவரை மொத்தமே 5 %பேருக்குத் தான் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இது சர்வதேச அவமானம். இந்த 50 லட்சம் மரணம் என்ற எண்ணிக்கை அவமானச் சின்னம் மட்டுமல்ல எச்சரிக்கை மணியும் தான்.

எனவே  இந்த ஆண்டு இறுதிக்குள் உலகில் உள்ள ஒவ்வொரு தேசத்திலும் குறைந்தது 40 % மக்களாவது தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக வேண்டும்.

2022  ஆண்டின் நடுப்பகுதிக்குள் 70 % மக்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். இதன் அவசியத்தை உணர்த்து உலகத் தலைவர்கள் செயற்பட வேண்டும்” என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!